திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள கல்லுக்குழியில் ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகவும், வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளிக்கும் சக்தி வாய்ந்த கோவிலாகவும் இது விளங்குகிறது. கிழக்கு திசை நோக்கிய இந்த சன்னதியில் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் திருமுகம் வடக்கு நோக்கியும், வலது கை அபயகஸ்த மாகவும், இடதுகையில் பாரிஜாத புஷ்பத்துடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு வருகிற அக்டோபர் மாதம் 5-10-2024-ம் தேதி ஆஞ்சநேய பக்தர்களின் நன்மைக்காகவும், உலக நன்மைக்காகவும் ஏக தின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலை 5-30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும், காலை 8-30 மணி முதல் பகல் 1 மணி வரை மற்றும் மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை விழாவும், இரவு 8 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நிறைவு விழாவும், மகா தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ல.பொன் மாரிமுத்து, தக்கார் தி.சுந்தரி, அர்ச்சகர் வா.கோகுல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Comments are closed.