திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு தனியார் ஹோட்டல் அருகே நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் உறையூர், தெற்கு மாதுளங்கொல்லை தெருவைச் சேர்ந்த ரமேஷ் (வயது55) மற்றும் திருச்சியை அடுத்த மணப்பாறை, வையம்பட்டியைச் சேர்ந்த செல்லதுரை (55) என்பதும், இவர்கள் அங்கு கள்ளத்தனமாக மது விற்றதும் தெரியவந்தது. அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Comments are closed.