Rock Fort Times
Online News

டெல்லியிலும் தடம் பதிக்கும் த.வெ.க: மாநிலங்களவை முதல் எம்.பி. யார்?

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட த.வெ.க., 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்று இருக்கிறார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே, அ.தி.மு.க.வைச் சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டி வெற்றி பெற்றதால், அவர் வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே, அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த ஒரு இடத்திற்கு மாநிலங்களவை எம்.பி.யை நியமனம் செய்ய விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. அந்த அறிவிப்பு வரும் பட்சத்தில், தமிழக சட்ட மன்றத்தில் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களை கொண்ட த.வெ.க.வுக்கு அந்த ஒரு உறுப்பினர் பதவி கிடைக்கும். அந்தவகையில், சட்டமன்ற தேர்தலில் வென்ற கையோடு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியையும் த.வெ.க. கைப்பற்ற உள்ளது. இந்த பதவி த.வெ.க. முக்கிய நிர்வாகி ஒருவருக்கு வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. த.வெ.க. முதல் எம்.பி. யார் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது. இதன்மூலம் மாநில அரசியலை தொடர்ந்து டெல்லி அரசியலிலும் த.வெ.க. தடம் பதிக்க உள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்