Rock Fort Times
Online News

ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை… தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தரப்பு விளக்கம்! 

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று(28-07-2026) நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க இருக்கிறார். இந்த விழாவில் முதலில் வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட வேண்டும் என்று ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும் அதன்படியே பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தமிழ் தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ் தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இதேபோல, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் காவல்துறை ஆலோசனைக் கூட்டம் மற்றும் அலுவலகப் பணி காரணமாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்றும், ஆளுநர் விழாவை புறக்கணிக்க வில்லை என்றும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்