பிளஸ்-2 முடித்த மாணவிகளுக்கு கட்டணமின்றி 2 வருட நர்சிங் பயிற்சி பெற அருமையான வாய்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இதில் சேர விருப்பமுள்ள பிளஸ் -2 முடித்த மாணவிகள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வங்கிக்கு சென்று ரூ.200- க்கு DD எடுத்து விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து நிரப்பி உங்கள் ஊரில் உள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று விரைவு தபால் (Speed Post) மூலம் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு கல்லூரி கட்டணம் மற்றும் தங்கும் விடுதிக்கான கட்டணம் எதுவும் கிடையாது. மெஸ் கட்டணம் மட்டுமே. இரண்டு ஆண்டு படிப்பை நிறைவு செய்யும் மாணவிகளுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். சென்னையில் எழும்பூர், பூந்தமல்லி, திருவல்லிக்கேணியிலும், நாமக்கல் மாவட்டத்தில் மாணிக்கம் பாளையம், திண்டுக்கல் மாவட்டத்தில் காந்திகிராம், மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர், தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம், சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, திருநெல்வேலி ஆகிய 11 ஊர்களில் இந்த கல்லூரிகள் அமைந்துள்ளது.
Application link👇
மேலே உள்ள 29 பக்க விண்ணப்ப விளக்க படிவத்தில் பக்கம் 27,28, 29 ஆகிய 3 பக்கங்களை மட்டும் 2 copies Print எடுத்து பிழைின்றி 29.07.2026 க்குள் இணை இயக்குநர் (பயிற்சி) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை 359, அண்ணா சாலை, DMS வளாகம், தேனாம்பேட்டை சென்னை 600 006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், விவரம் தேவைப்படுவோர்
044 -29510136
044- 29510167
044- 29510183
என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.