Rock Fort Times
Online News

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை… * பொறியியல் மாணவர் சேர்க்கை குழு எச்சரிக்கை..!

அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கக்கூடாது எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026 கால அட்டவணைபடி அரசு பள்ளியில் பயின்ற மற்றும் பொது பிரிவினருக்கு சிறப்பு கலந்தாய்வு ஜூலை 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 950 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்களிடம் இருந்து எந்த ஒரு கட்டணமும் வசூலிக்க கூடாது. வேறுவிதமாக மாணவர்களின் விவரங்களை கொண்டு தவறான சேர்க்கைகளை செய்ய கூடாது. இந்த நடைமுறையை பின்பற்றாத கல்லூரிகள் மற்றும் சேர்க்கை நடைமுறையில் புகார்கள் ஏதேனும் தெரியவந்தால், உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்