Rock Fort Times
Online News

மேகதாது விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்… * பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் பரபரப்பு கடிதம்..!

மேகதாது விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்… * பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் பரபரப்பு கடிதம்!

 

மேகதாது அணை கட்ட தமிழக ஒப்புதல் தேவை இல்லை என்ற மத்திய அமைச்சரின் பேச்சுக்கு முதலமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார். அதில், கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று மத்திய அமைச்சர் பேசி உள்ளார். அந்தப் பேச்சை அவர் திரும்ப பெற வேண்டும். காவிரி என்பது வெறும் நீர் ஆதாரம் மட்டும் அல்ல, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம். கடைமடை மாநில அனுமதி இன்றி மேலே உள்ள மாநிலம் அணை கட்ட முடியாது. நீர்வளத்துறை இணை அமைச்சர் அளித்த பதிலை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நீரின் அளவு சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேகதாது அணைக்கு எந்த அனுமதியும் தரக்கூடாது. முழுமையான தொழில்நுட்ப சட்டப்பூர்வ ஆய்வுக்குப் பிறகு இத்திட்டம் குறித்த முடிவு எடுக்கப்பட வேண்டும். தமிழக ஒப்புதல் இன்றி கட்டுமானம் கூடாது. கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு செல்லும் நீரின் அளவை பாதிக்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. மேகதாது விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்