Rock Fort Times
Online News

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்- திருச்சியில் 4 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை….

  தமிழகத்தில் லாரிகளுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும், தேவைக்கேற்ப மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்  இன்று ( 08.11.2023 ) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் 4000க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. வேலை நிறுத்தம் காரணமாக திருச்சி குட்செட் பகுதியில் 200க்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் லாரிகளில் ஏற்றிச் செல்லப்படும் அத்தியாவசிய பொருட்கள் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் லாரி தொழிலை நசுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டால் வருகிற 1-ம் தேதிமுதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினா்  தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்