Rock Fort Times
Online News

கொள்ளையடித்த பணத்தில் சொத்துக்களை வாங்கி குவித்த திருச்சி பெண்மணிகள்….

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்...

திருச்சியைச் சேர்ந்த 2 பெண்மணிகள் கொள்ளை அடித்த பணத்தில் சொத்துக்களை வாங்கி குவித்த சம்பவம் போலீசாரையே மிரள வைத்துள்ளது.
திருச்சி சமயபுரம்
மாரியம்மன் கோவிலுக்கு சென்ற மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பஸ்ஸில் சென்ற போது அவரது ஒன்னரை பவுன் சங்கிலி மாயமானது. இதனால அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், பஸ்சை விட்டு கீழே இறங்கி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து உத்தரவுகள் பறக்க, லால்குடி டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை சல்லடை போட்டு போலீசார் தேடினர். அப்போது சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில நின்று கொண்டு இருந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர் போலீசார். அப்போது அந்தப் பெண்கள் சொன்ன விவரங்கள் போலீசாரையே மிரள வைத்தது. அந்தப் பெண்களில் ஒருவரது நிஜப் பெயர் கல்பனா(45) என்பதும், மற்றொரு பெண்ணின் பெயர் காளியம்மாள்(48) என்பதும் தெரிய வந்தது.
அவர்கள் ஒரு இடத்தில் கூட ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக தங்கியதில்லை என்பதும், போகிற இடங்களில் எல்லாம் பெயர்களை மாற்றி வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள்ல ஈடுபட்டதும் தெரிய வந்தது. அந்த வகையில கடந்த 15 வருடமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

கோயம்புத்தூர், பழனி, திருச்சி, திருவண்ணாமலை, குன்றத்தூர், சென்னை, பெரியபாளையம், திருவாரூர், சித்தூர், காளகஸ்தி, திருப்பதி, மகாராஷ்டிரா, மும்பை என்று அவங்க கால் பதிக்காத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு திருட்டு தொழிலை அமோகமாக நடத்தியதும் தெரிய வந்தது. இதற்கிடையே திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில் திருவெறும்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில லால்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஜய்தங்கம் மற்றும் சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அந்த பெண்களிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுமார் 58 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரூ.26 ஆயிரம் ரொக்கம், ரூ. 3 கோடி மதிப்புள்ள பத்திர ஆவணங்கள், இரண்டு செல்போன், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்ற போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த திருட்டு வழக்கில தொடர்புடைய இரண்டு ஆண்களிடமும் போலீஸ் தனிப்பட்டனர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடமிருந்து மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என போலீசார் எதிர்பார்க்கிறார்கள். கொள்ளையடிக்கப்பட்ட பணத்துல சொத்துக்களை வாங்கி குவித்த ரெண்டு பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்