Rock Fort Times
Online News

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரெய்டில் இருந்து எஸ்கேப் ஆன திருச்சி மேற்கு தாசில்தார் முருகன்… டி.ஆர்.ஓ.பாலாஜியின் திடீர் விடுப்பால் வலுக்கும் சந்தேகம்..?

தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பொறுப்பேற்றதற்குப்பிறகு, அரசுத்துறைகளில் லஞ்சம் மற்றும் ஊழலைத்தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மிகக்குறிப்பாக கமிஷனில் திளைத்து, கரன்சி கட்டுகளில் குளித்த போக்குவரத்துத்துறை, பத்திரப்பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை போன்ற பணப்புழக்கம் அதிகமுள்ள துறைகளின் “கரெப்ஷன் அதிகாரிகளை” டார்கெட் செய்து ரெய்டு நடத்தி கணக்கில் வராத லட்சக்கணக்கான பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஒரேநேரத்தில் 35 இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில் சுமார் 1.18 கோடி ரூபாய் பணமும், ஜி.பே மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட லட்சக்கணக்கான ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட இந்த மாநிலம் தழுவிய ரெய்டில், திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகமும் ஒன்று. ஆனால், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் தனது அலுவலகத்திற்கு சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே “ஸ்மெல்” செய்த தாசில்தார் முருகன், எப்படியோ லஞ்ச ஒழிப்புத்துறையினரின் வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார். இதையடுத்து அவரது செல்போனும் தற்போது தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. இதனால், தற்போது திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்ட டி.ஆர்.ஓ பாலாஜி திடீரென விடுப்பில் சென்றிருப்பது, விஜிலென்ஸ் ரெய்டு தொடர்பான பதுங்கலா ? என்கிற சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருச்சி மேற்கு தொகுதி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரெய்டு – தாசில்தார் முருகன் எஸ்கேப் – போலீசார் விசாரணை – டி.ஆர்.ஓ பாலாஜியின் திடீர் விடுப்பு ஆகிய நான்கு கோணங்களிலும் கூட்டி கழித்துப் பார்த்தால் கணக்கு எங்கேயோ இடிப்பதாக கலெக்டர் அலுவலகத்திற்குள்ளேயே கிசுகிசுப்பு சத்தம் கேட்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்