நேபாளத்தில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மாயமாகி உள்ளனர். நேபாளத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழர்களும் இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கினார்கள். அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
இதற்கிடையே, நேபாளத்தில் சிக்கி உள்ள அனைத்து தமிழர்களையும் மீட்க முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், 4 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் டெல்லியில்
முகாமிட்டுள்ளனர். 21 தமிழர்கள் தமிழகம் திரும்பிய நிலையில், மீதமுள்ளவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. திபெத்தில் சிக்கி உள்ள 39 தமிழர்களும் நலமாக உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில் நாளை(ஆகஸ்ட் 30) நேபாளத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து டெல்லி அனுப்பி வைக்கப்பட உள்ளனர். நேபாளத்திலிருந்து டெல்லி வந்தடைந்ததும் 33 பேர் கோவைக்கும், 6 பேர் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.