திருச்சி, திருவானைக்காவலில் அடிமனை பிரச்சனை: 4000 குடும்பங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் முடிவு…!
திருச்சி, திருவானைக்காவல் அடிமனை பிரச்சினை குறித்து அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது .ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. பலமுறை அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பு சாரபாக அதன் தலைவர் எம்.மாரி(எ)பத்மநாபன் தலைமையில் செயலாளர் குரு சந்தோஷ், ஆலோசனை தலைவர் எஸ் கலைமணி ஞானமூர்த்தி, ராதாகிருஷ்ணன்,
ராஜா,பிரஸ்வெங்கடேஷ், மகேந்திரன், உதயகுமார், பிரபு, ரவிபிள்ளை, மதி, முருகானந்தம், இங்கர்சால், தேவி, வரதராஜன் மற்றும் அடிமனை உரிமையாளர்கள் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி தலைமையில் திருவானை காவலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் செயல்அலுவலர் விதித்த உத்தரவை ரத்து செய்ய இணை ஆணையராகிய எனக்கு எந்தவித அதிகாரம் இல்லை என்று கல்யாணி கூறினார்.
இதன் அடிப்படையில் வெகுவிரைவில் பாதிப்படைந்த சுமார் நான்காயிரம் குடும்ப உறுப்பினர்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தஉள்ளதாக திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.