திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் கூட்டம் தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமை வகித்து, ஆலோசனை வழங்கி பேசுகையில்,
2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வது, 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு அமைக்கும் பணிகளை சிறப்பாகவும், விரைவாகவும் மேற்கொண்டு அக்டோபர் 5ம் தேதிக்குள் அமைப்பது, தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய , திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு, மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட இணை செயலாளர் இந்திராகாந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பரமேஸ்வரி முருகன், மல்லிகா சின்னசாமி, அமைப்பு செயலாளர் வளர்மதி, எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன் செல்வராஜ் , ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செல்வராசு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், சரோஜா இளங்கோவன், நகர செயலாளர்கள் சுப்ரமணியன், அமைதி பாலு, ஒன்றிய செயலாளர்கள் ஆதாளி, செல்வராஜ், முத்துகருப்பன், எல்.ஜெயக்குமார், ஜெயராமன், குமரவேல், பிரகாஷவேல், ஜெயக்குமார், ஜெயம், நடராஜன், அழகாபுரி செல்வராஜ், ராம் மோகன், வெங்கடேசன், கடிகை ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
1
of 899
Comments are closed, but trackbacks and pingbacks are open.