ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவரை கோயில் இணை ஆணையர் மாரியப்பன், உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு மூலவர் பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி ஆகிய இடங்களில் வழிபட்டார். பின்னர் இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் திருச்சி மண்டல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ஜி பாலமுருகன், திருச்சி சிலை கடத்தல் பிரிவு ஆய்வாளர் ஆர்.இந்திரா, உதவி ஆய்வாளர் டி.பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து அன்பில் மாரியம்மன் கோயிலில் கிடைத்த செப்பு தகடு குறித்து ஆய்வு மேற்கொள்ள அன்பில் மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.
Comments are closed.