திருச்சி,மதுரைரோடு கல் யாணசுந்தரபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர் தனது மோட்டார்சைக்கிளை அதே பகுதியில் சாலையோரம் நிறுத்திவிட்டு வீட்டுக்கு தூங்க சென்றார். காலை மீண்டும் வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வை யிட்டார். அப்போது இரவு நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களில் ஒருவர் கீழே இறங்கி பைக்கை லாவகமாக திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. மேலும், அந்த நபர் தன்னை அடையாளம் காணக்கூடாது என்ப தற்காக முக்கவசம் அணிந்திருந்ததும் தெரியவந்தது.
திருச்சியில் சமீபகாலமாக பொதுமக்களின் மோட்டார் சைக்கிள்கள் பல்வேறு இடங்களில் திருட்டு போய் கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மாநகர காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை பொறிவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
Comments are closed.