மின்மோட்டார் பராமரிப்பு பணி திருச்சி மாநகரில் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் ரத்து !மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு !
மின்மோட்டார் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் ( ஜூன் 2) மாநகரப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது., திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் டர்பைன் நீர் பணி நிலையத்திலிருந்து மின்மோட்டார் மூலம் குடிநீர் உந்தப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மெயின் ரோடு அய்யாளம்மன் படித்துறை அருகில் இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மற்றும் டர்பைன் நீர் பணி நிலையத்தில் உள்ள மின் மோட்டார்களுக்கு ஃப்லோ மீட்டர் பொருத்த வேண்டியுள்ளது.இந்த பணிகள் நாளைய தினம் அதாவது ஜூன் 1ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இங்கிருந்து குடிநீர் விநியோகம் பெறும் மலைக்கோட்டை, சிந்தாமணி,உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் நாளை மறுநாள் ( ஜூன் 2ம் தேதி இருக்காது. அடுத்த நாள் முதல் குடிநீர் வினியோகம் வழக்கம்போல் தொடரும். இதனால் பொதுமக்கள் குடிநீர் சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியின் பணிக்கு ஒத்துழைக்குமாறு கோட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments are closed.