Rock Fort Times
Online News

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தேர்தல்- தலைவராக வி.எஸ்.பி. இளங்கோவன் தேர்வு…!

திருச்சி சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அறங்காவலர் குழு தேர்தல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று(16-03-2024) நடைபெற்றது. இதில், மண்ணச்சநல்லூர் வெங்கங்குடியை சேர்ந்த வி.எஸ்.பி. இளங்கோவன், எஸ்.கண்ணனூர் பகுதியை சேர்ந்த ராஜசுகந்தி, மருதூர் பகுதியை சேர்ந்த பிச்சைமணி, எஸ்.கண்ணனூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இதில் வெங்கங்குடி இளங்கோவன் 4 வாக்குகள் பெற்று அறங்காவலர் குழு தலைவராக வெற்றி பெற்று பொறுப்பேற்று கொண்டார். இதே போல் ராஜசுகந்தி, பிச்சைமணி, லட்சுமணன் ஆகியோர் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அரங்காவலர் குழு தேர்தல், இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல உதவி ஆணையர் லட்சுமணன் தலைமையில், சரக ஆய்வாளர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் கோவில் புதிய அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு கட்சி நிர்வாகிகளும் கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் குருக்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்