திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப் பணித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கிடையே கலைத் திருவிழா…!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூக பணித்துறை யின் சார்பில் சர்வதேச சமூகப் பணி தினத்தை முன்னிட்டு “சிறந்த எதிர் காலத்திற்கான மாற்றம்” என்ற தலைப்பில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கலை திருவிழா 15-03-2024 மற்றும் 16-03-2024 ஆகிய 2 நாட்கள் பாரதிதாசன் பல்கலைக்கழக
காஜாமலை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு முக ஓவியம், வினாடி-வினா, புதையல் வேட்டை முதலான போட்டிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து “சிறந்த எதிர்காலத்திற்கான மாற்றம்” என்னும் தலைப்பில் மாபெரும் பேரணி காஜாமலை வளாகத்தில் இருந்து தொடங்கி மன்னார்புரம் வரை நடைபெற்றது. திருச்சி கண்டோன் மென்ட் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காந்திமதி பேரணியை தொடங்கி வைத்தார். போட்டிகள் மற்றும் பேரணியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்திருந்த மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.