Rock Fort Times
Online News

திருச்சி: தெரு நாய்களை சுட்டுக்கொன்றதாக ஓய்வுபெற்ற பேராசிரியர் கைது…

திருச்சி கருமண்டபம் குறிஞ்சி தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் ( வயது 60). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், அரசு உரிமம் பெற்று இரட்டைக்குழல் துப்பாக்கி வைத்துள்ளார். இவர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 தெருநாய்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அவர் மேலும் ஒரு நாயை சுட்டதாகவும், அந்த நாய் காலில் காயத்துடன் தப்பிச்சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சுப்பிரமணியன் என்பவர் காவல்துறையின் 100ஐ தொடர்பு கொண்டு தெரிவித்தார். அதன்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்