ஸ்ரீரங்கம், மேலூர் கொள்ளிடக்கரை பகுதியை சேர்ந்த மெக்கானிக் மற்றும் ஆட்டோ ஓட்டும் சகோதரர்களான அருண் (22) மற்றும் ஹரிஷ் (19) ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்காவல் செல்லும் மேம்பாலத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்புறம் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்திசெல்ல முயன்றபோது, எதிரே வந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் பயங்கர வேகத்தில் மோதியது . இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.