Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.78 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்- 2 பயணிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!

சிங்கப்பூரிலிருந்து  இண்டிகோ விமானம் ஒன்று  திருச்சி  சர்வதேச விமான நிலையத்தை இன்று(11-07-2024) காலை வந்தடைந்தது.  அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உடையில் மறைத்து ரூ.51 லட்சத்து 19 ஆயிரத்து 774 மதிப்புள்ள 682 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதே விமானத்தில் பயணம் செய்த மற்றொரு பயணி  ரூ.27 லட்சத்து  2 ஆயிரத்து 520 மதிப்புள்ள 360 கிராம் தங்க சங்கிலியை கடத்தி வந்தார்.  அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணிகள் 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்