திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி ‘ஜி’ கார்னர் அருகே பாலம் பழு தடைந்துள்ளதால் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி
* மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.
* சென்னை, பெரம்பலூர் மார்க்கத்திலிருந்து திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல் வழியாக செல்ல வேண்டும்.
* சென்னை, பெரம்பலூர், அரியலூர் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பால்பண்ணை, துவாக்குடி, திருச்சி புதிய சுற்றுச்சாலை வழியாக சென்று வர வேண்டும்.
* சேலம், நாமக்கல் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் முசிறி, குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும்.
* கோவை, கரூர் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும்.
* அரியலூர் மார்க்கத்திலிருந்து மதுரை செல்லும் கனரக வாகனங்கள் நெ.1 டோல்கேட், முசிறி, குளித்தலை, மணப்பாறை, திண்டுக்கல் வழியாக சென்று வரவேண்டும்.
* திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, விராலிமலையிலிருந்து சென்னைக்கு செல்லும் கனரக வாகனங்கள் மணிகண்டம், வண்ணாங்கோயில், மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர் பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும்.
* திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் பயணிகள் பேருந்துகள் டிவிஎஸ் டோல்கேட், ஏர்போர்ட், திருச்சி புதிய சுற்றுச்சாலை, துவாக்குடி வழியாக செல்ல வேண்டும்.
* தஞ்சாவூரிலிருந்து திருச்சி வரும் பயணிகள் பேருந்துகள் வழக்கமாக வரும் பாதையான துவாக்குடி, திருவெறும்பூர், பால்பண்ணை வழியாக வரவேண்டும்.
கூடுமான வரை அனைத்து வாகனங்களும் ஜி கார்னர் ரயில்வே பாலம் வழியாக செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.