Rock Fort Times
Online News

திடீர் மாரடைப்பால் பலியான திருச்சி போலீஸ்

திருச்சி, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் விநாயகமூர்த்தி ஸ்ரீரங்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று அவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று மயக்கம் வருவதாக கூறி உள்ளார். உடனடியாக அவருடைய மனைவி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததார்.விரைந்து வந்த மருத்துவர்கள் காவலர் விநாயகமூர்த்தியை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து அவர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விநாயகமூர்த்தி இறந்த சம்பவம் உடன்பணியாற்றும் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்