திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருவெறும்பூர் அருகே என்.ஐ.டி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் -29) மதியம் கல்லூரி விடுதியில் தங்கிப் பயிலும் மாணவி ஒருவரிடம், அங்கு காண்ட்ராக்ட் முறையில் வேலை பார்க்கும் எலக்ட்ரீசியன் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்து சக மாணவிகளிடம் தெரிவித்தார்.இது குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடாத விடுதி வார்டனை கண்டித்தும், என்.ஐ.டி,மாணவ மாணவிகள் நேற்று நள்ளிரவு 11:30 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போராட்டம் இன்று மதியம் 10:30 வரை தொடர்ந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி வருண்குமார் மாணவர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார், விடுதி வார்டன் குறித்து நீங்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக திருச்சி மாவட்ட கலெக்டரும் தெரிவித்தார். இப்பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு ஏற்படவே, மாணவர்கள் தங்களது போராட்டத்தை தற்போது வாபஸ் பெற்றனர்.

Comments are closed.