Rock Fort Times
Online News

திருச்சி, துவாக்குடி அருகே தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு ! மர்ம நபர்கள் கைவரிசை

திருச்சி, துவாக்குடி வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி செல்வி (39). இவர் வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீடு சென்றுவிட்டார். மறுநாள் வந்துபார்த்தபோது, வீட்டின் கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டு, பீரோவில் இருந்த சங்கிலி, மோதிரம், தோடு உள்பட 3 பவுன் நகைகள், மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்