Rock Fort Times
Online News

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் மஹா கும்பாபிஷேகம்- விமரிசையாக நடைபெற்றது… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி ஜங்ஷன் கல்லுக்குழி பகுதியில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் இன்று(21-01-2024) மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நான்கு கால யாக பூஜைகள் மற்றும் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் பட்டாச்சாரியார்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கிட மூலஸ்தானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்