Rock Fort Times
Online News

திருச்சி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது…

Trichy For School Girls Teacher arrested for sexual harassment

திருச்சி மாவட்டம் ஆர்.வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (வயது 57).இவர், பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.பெரம்பலூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர்,பள்ளி மாணவிகளுக்கு பாலியல்ரீதியான தொந்தரவு கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் மாணவிகள் தெரிவித்தனர்.அவர்கள் பள்ளித் தலைமையிடம் பல முறை புகார் அளித்தனர்.ஆனால், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆசிரியர் சௌந்தரராஜன் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதனை அறிந்து கோபமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கடந்த 14ஆம் தேதி பள்ளியை முற்றுகையிட்டனர். போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி புகாரைப் பெற்றனர். சௌந்தர்ராஜனிடம் நடத்திய விசாரணையில், அவர் ஏற்கனவே பணியாற்றிய இடங்களிலும் மாணவிகளுக்கு இது போன்ற பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.
இதனைஅடுத்து சௌந்தரராஜன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்