திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் சார்பில், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.கேர் அறக்கட்டளை மறுவாழ்வு மையத்தில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி செப்டம்பர் 8-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் வி.ஆர்.குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மது பழக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள், அதனால் உருவாகும் சட்டச் சிக்கல்கள், தனிநபர், குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சட்ட உரிமைகள் குறித்தும் விளக்கமளித்தார். ஆர்.எஸ்.கேர் அறக்கட்டளையின் நிறுவனர் ராமமூர்த்தி வழிகாட்டுதலின் கீழ், மேலாளர் கிஷோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சமூகப்பணி மாணவர்களின் களப்பணிக்கு வழிகாட்டியாக உதவி பேராசிரியர் முனைவர் வித்யா செயல்பட்டார். இதற்கான ஏற்பாடுகளை சமூகப்பணி மாணவர்களான தமயந்தி, லட்சுமி பிரியா, காட்வின் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

Comments are closed.