மனித உடலை விட்டு உயிர் பிரிந்த அந்த 3 நாட்கள் மிக முக்கியம் ஏன் தெரியுமா? இதுதான் காரணம்… (வீடியோ இணைப்பு)
இறந்தவர்களின் உடலைத் தீயில் எரிப்பது பாவம் என்று வள்ளலார் (இராமலிங்க அடிகளார்) கூறுகிறார். ‘பரன் அளிக்கும் தேகம் இது, சுடுவது அபராதம்” என்று அவர் பாடியுள்ளார். இறைவன் அருளிய இந்த மனித உடலைத் தீயில் எரித்து சாம்பலாக்குவது தவறு என்பது அவரது கருத்து. இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
மனித உடலில் 10 வகையான வாயுக்கள் உள்ளன. அவை ‘தச வாயுக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை பிரதான 5 வாயுக்கள் மற்றும் 5 துணை வாயுக்கள் என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரதான வாயுக்களாக பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் வாயுக்களும், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகிய 5 துணை வாயுக்களும் ஆகும். இதில், பிராணன் வாயு சுவாசத்தை உள்ளிழுத்து உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது. அபானன் – பிரசவம் மற்றும் உடலில் உள்ள கழிவுகள் போன்றவற்றை வெளியேற்ற உதவுகிறது. வியானன் – உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தையும், இயக்கத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. உதானன் – பேசுவதற்கும், மேல் நோக்கிய செயல்பாடுகளுக்கும் உதவுகிறது. சமானன் – உணவைச் செரிமானம் செய்து சத்துக்களை உடல் முழுவதும் சீராகப் பரப்புகிறது.
நாகன் – தும்மல் மற்றும் வாந்தி எடுப்புச் செயல்களை உருவாக்குகிறது. கூர்மன் -கண்களைத் திறப்பது, மூடுவது போன்றவற்றை முறைப்படுத்துகிறது. கிருகரன் – தும்மல், இருமல் மற்றும் உமிழ்நீர்ச் சுரப்பை ஏற்படுத்துகிறது. தேவதத்தன் – கொட்டாவி விடுதல் மற்றும் சோம்பலைத் தருகிறது. இந்த ஒன்பது வாயுக்களும்
உடலை விட்டு உயிர் பிரிந்ததும் வெளியேறிவிடும். ஆனால் பத்தாவதாக உள்ள தனஞ்செயன் வாயு மட்டும் 3 நாட்கள் நம் உடலை விட்டு வெளியேறாது. இந்த வாயு இறந்தவர் உடலை வீங்கச் செய்தல், அழுகச் செய்தல் போன்றவற்றை செய்யும்.
இவ்வாறு வள்ளலார் கூறுகிறார். இதனால் தான் இறந்தவர் உடலை வீங்க விடாமல் நாம் ஐஸ் பெட்டியில் வைக்கிறோம்.

Comments are closed.