திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று ( 16.10.2023 ) மக்கள் குறைதீர் மனுநாள் முகாம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர். மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில், மனுவாங்கும் அரங்கத்தின் நுழைவாயில், பின்புற வாசல் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும்மாவட்ட ஆட்சியா் அலுலக வளாகத்தில் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருச்சி எட்டறை பகுதியை சேர்ந்த கஜப்பிரியா, திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென தான் வைத்திருந்த மண்எண்ணையை உடலின் மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை முறியடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனது கணவர் கார்த்திக் திருக்காட்டுப்பள்ளி காவல்நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருவதாகவும், தற்போது தன்னுடன் வாழ மறுப்பதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதே போல தாயனூர் பகுதியை சேர்ந்த பனையடி என்பவர் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மண்எண்ணைய் கேனுடன் வந்துள்ளார். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பிரதான வாயிலில் போலீசார் தீவிர சோதனை நடத்துவதை கண்ட அவா், மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாசலிலேயே மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை கண்டு தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் , தனக்கு சொந்தமான இடத்தின் பாதையை சிலர் ஆக்கிரமித்து கொண்டதாகவும், மீட்டு தர கோரி பலமுறை மனு அளித்தும் பலனில்லை என்பதாலும், தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்தார். இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.