காவிரியில் நமது மரபு உரிமையை நிலைநாட்டவும். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை பாதுகாக்கவும் மறுமலர்ச்சி திமுக. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் விக்னேஷ் ஹோட்டல் அருகில் இன்று ( 16.10.2023 ) காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக முதன்மைச் செயலாளரர் துரை வைகோ தலைமை தாங்கினார்.திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு வரவேற்று பேசினார். துணை பொதுச் செயலாளர்கள் ஆடுதுறை முருகன், ரொஹையா, மாநில விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் கு. சின்னப்பா, பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் திருச்சி வடக்கு டி.டி.சி. சேரன், திருச்சி தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், தஞ்சை தெற்கு தமிழ்செல்வன், தஞ்சை வடக்கு ஸ்டாலின், திருவாரூர் பாலச்சந்திரன், நாகை ஸ்ரீதரன், மயிலாடுதுறை கொளஞ்சி, திண்டுக்கல் செல்வராகவன், புதுக்கோட்டை கலியமூர்த்தி, கரூர் ஆசை சிவா, அரியலூர் ராமநாதன், பெரம்பலூர் ஜெயசீலன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் புலவர் தியாகராஜன், பெல் ராஜமாணிக்கம், கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார், எல்லக்குடி அன்புராஜ்,துரை வடிவேல், பகுதி செயலாளர்கள் சி. ராமமூர்த்தி, ஆசிரியர் முருகன், கோபால கிருஷ்ணன், ஆடிட்டர் வினோத், பத்மநாதன். முன்னாள் கவுன்சிலர் விஜயலட்சமி, இளைஞர் அணி தினேஷ் குமார், வீரம் விக்னேஷ், ஒன்றியச் செயலாளர் மைக்கேல்ராஜ், தலைமைக் கழக நிர்வாகிகள், ஒன்றியச் செயலாளர்கள்,கழக அணிகளின் நிர்வாகிகள். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வர்த்தகப் பெருமக்கள், பொதுமக்கள், தொண்டர்கள் உள்பட ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.