Rock Fort Times
Online News

இந்து சமய அறநிலையத்துறையில் 36 உதவி பொறியாளர்கள் உட்பட 80 நபர்களுக்கு பணி நியமன ஆணை…* முதல்வர் விஜய் வழங்கினார்..!

தமிழக முதல்வர் விஜய் இன்று (18.8.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, மாரியம்மன் திருக்கோயிலில், 23 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 36 உதவிப் பொறியாளர்கள் (கட்டுமானம்), 38 உதவி ஸ்தபதிகள், 6 செயல் அலுவலர்கள் (நிலை-1 மற்றும் நிலை-3) என மொத்தம் 80 நபர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ், தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன்,இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் டி.ஜி.வினய், கூடுதல் ஆணையர்கள் துரை ரவிச்சந்திரன், பொ. ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்