மகளிரிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ‘சிங்கப்பெண் விளையாட்டு திருவிழா’ நடத்தப்படும்… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!
மகளிர் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக சிங்கப்பெண் விளையாட்டு திருவிழா நடத்தப்படும். தமிழக பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி, கோகோ, சிலம்பம், களரிபட்டு, மல்லர்கம்பம் போன்ற விளையாட்டுக்களை உலக அளவில் கொண்டு செல்வதற்காக தமிழகம் முழுவதும் இந்த விளையாட்டு போட்டிகளை நடத்த ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
38 மாவட்டங்களிலும் விளையாட்டு மாணவர்களுக்கான விடுதி இந்த ஆண்டிலேயே அமைக்கப்படும். விளையாட்டு வீரர்களை கண்டறிய புதிய அமைப்பு உருவாக்க உள்ளோம் என சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Comments are closed.