திருச்சி நீதிமன்றத்தில் புதிய தார்ச்சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும்- உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் கோரிக்கை…
திருச்சி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையைச் சேர்ந்த போர்ட்போலியோ நீதிபதிகளான சுப்ரமணியம், ஸ்ரீமதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் வட்டார அளவிலான நீதிமன்றங்கள் உள்ளிட்டவைகளில் கடந்த சில நாட்களாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்கு வந்த நீதிபதிகளுக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுசமயம் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் 46-வது ஆண்டு விழா நினைவு கேடயம் வழங்கப்பட்டது. மாவட்ட தலைமை அரசு வழக்கறிஞர் சவரிமுத்து முன்னிலையில் சங்கத்தின் செயலாளர் பி.வி.வெங்கட் கேடயத்தை வழங்கினார்.பின்னர் வழக்கறிஞர்களின் குறைகளை நீதிபதிகள் கேட்டறிந்தனர். அப்போது நீதிமன்றத்தில் புதிய சாலை வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் செயலாளர் பி.வி.வெங்கட் நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார். அப்போது அரசு கூடுதல் வழக்கறிஞர் மோகன், ஜாகிர்உசேன் மற்றும் பொறுப்பாளர்கள் சுதர்சன், சசிகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.