Rock Fort Times
Online News

கோடக் மகேந்திரா வங்கி ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி, கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (55).  இவர் தான் நடத்தி வரும் நிறுவனத்தின் பெயரில் திருச்சி கோடக் மஹிந்திரா வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளார். அதே வங்கியில் இவரின் மனைவியும் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த 05-03-2018 அன்று சௌந்தரராஜன் தனது நிறுவனக் கணக்கிலிருந்து, தனது மனைவியின் சேமிப்புக் கணக்குக்கு ரூ.22,000-ஐ டிரான்ஸ்பர் செய்ய விண்ணப்பித்திருந்தார். ஆனால், அத்தொகை சௌந்தரராஜன் மனைவியின் கணக்குக்கு மாற்றப்படாததால், அவர் மனைவி கொடுத்திருந்த இரு காசோலைகள் போதிய பணமின்றித் திரும்பின. இதுபற்றி கேட்டபோது, வங்கியில் வாடிக்கையாளர் கேஒய்சி வழங்காததால் அவரது கணக்கு முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், கேஒய்சி கேட்டு தனக்கு எந்த ஒரு அறிவிப்பும் அனுப்பாமல், வங்கி தனது கணக்கை முடக்கியதோடு, முடக்கத்தை வாடிக்கையாளருக்குத் தெரிவிக்காமல் இருந்துவிட்டு அதன் விளைவாக காசோலைகள் திரும்பியதால், பெரும் மனஉளைச்சலும், பெயருக்கு களங்கமும் ஏற்பட்டது.இதற்கு வங்கியே பொறுப்பு என்பதால் திருச்சி கோடக் மகேந்திரா வங்கி ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக் கோரி திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சௌந்தரராஜன் வழக்குத் தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் ஆர். காந்தி, உறுப்பினர்கள் ஜே.எஸ். செந்தில்குமார், சாயீஸ்வரி அடங்கிய அமர்வு, வங்கிக் கணக்கை முடக்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பும், பின்பு 3 மாதத்துக்கு அவகாசம் அளிக்கவும் வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை முறையாகப் பின்பற்றாத கோடக் மகேந்திரா வங்கி, இழப்பீடாக சௌந்தர ராஜனுக்கு ரூ. 50 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 5,ஆயிரமும் வழங்க உத்தரவிட்டது

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்