Rock Fort Times
Online News

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம்…!

சட்டமேதை அம்பேத்கர் குறித்து பாராளுமன்றத்தில் அவமரியாதையாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி தலைமையில் மாநகர செயலாளரும், மேயருமான மு.அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏக்கள் பழனியாண்டி, சௌந்தரபாண்டியன் மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், கருணாநிதி, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், சேர்மன் துரைராஜ், டோல்கேட் சுப்பிரமணி, செவந்திலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், பகுதிச் செயலாளர்கள் கமால் முஸ்தபா, மோகன்தாஸ், நாகராஜ், இளங்கோ, ராம்குமார், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், தொ.மு.ச.மாவட்ட அமைப்பாளர் குணசேகரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி, மின்வாரிய தொழிற்சங்கம் சோலை பாஸ்கர், இன்ஜினியர் நித்தியானந்தம் மற்றும் நிர்வாகிகள் கலைச்செல்வி, பி.ஆர் பாலசுப்ரமணியன், கவிதா, பந்தல் ராமு, சர்ச்சில், உத்தமர்சீலி ராஜேந்திரன், குமரவேல், கருணாமூர்த்தி, வாமடம் சுரேஷ், அரவானூர் தர்மராஜன், கதிரேசன் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்று அமித்ஷாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்