சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ஆர்.ஜேம்ஸ் பால்ராஜ் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அதற்கான விருதை, சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஜேம்ஸ் பால்ராஜ் அடிகளாரிடம் வழங்கினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.