திருச்சி மாவட்டம்,
லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். காங்கிரஸ் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வரும் இவரது வீட்டின் மாடிப்படியின் கீழ் சிவப்பு நிறம் கொண்ட கொடிய விஷமுள்ள அரியவகை பாம்பு படுத்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நவீன கருவியின் உதவியுடன் அந்த பாம்பை உயிருடன் பிடித்தனர். 
பின்னர், அந்த பாம்பை தச்சங்குறிச்சி வனப்பகுதியில் விட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.