திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு – மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்
திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் ட்ரூத் லேப் சென்னை இணைந்து நடத்திய வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு
நடந்தது. பயிற்சி வகுப்பை மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார். வகுப்பில் பயிற்றுநர்கள் கலந்து கொண்டு தடய அறிவியல் மற்றும் அதன் பயன்பாடு பற்றி விளக்க உரை நிகழ்த்தினர். நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட்,துணைத் தலைவர் சசிகுமார், இணைச்செயலாளர் விஜய் நாகராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Comments are closed.