திருச்சி மாவட்டத்தில் மழைக்கால பாதிப்பு – உதவி பெற பிரத்தியேக தொடர்பு எண்கள் அறிமுகம் ! கலெக்டர் எம்.பிரதீப் குமார் தகவல்
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் மழைக்கால பாதிப்புகள் மற்றும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் குறித்து தகவல் அளிக்கவும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வசதியாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரத்தியேகமாக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் எம் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்., திருச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளிக்க 1077 என்ற எண்ணும் மேலும் 0431241895 என்ற கட்டணம் இல்லாத எண்ணும் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுமட்டும் இல்லாமல் 93 840 56 213 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் தேவைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம். திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உதவிகளைப் பெற வசதியாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்திலும் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில்
திருச்சி கிழக்கு
0431-2711602
9445461808
திருச்சி மேற்கு 0431-2410410 ,
9445000602
திருவரம்பூர்
0431-2555542.,
9790093270
ஸ்ரீரங்கம்
0431-2230871,
9445000603
மருங்காபுரி
04332-299381
9840378255
மணப்பாறை 04332-260576
9445000604
லால்குடி
0431-2541233
9445000605
மண்ணச்சநல்லூர்
0431-2561791
9445000606
முசிறி
04326 260226
9445000607
துறையூர்
04327-222393
9445000609
தொட்டியம்
04326-254409
9445000608
பகுதி மக்கள் இந்தஎண்களில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை பெறலாம். தற்போது, மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குழந்தைகளை செல்லாத வண்ணம் கவனமாக இருக்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments are closed.