திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஜாஸ்பர்- கிளாரா தம்பதிக்கு சுமார் இரண்டரை வயதில் கிளான்ஸி என்ற பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று (25-01-2024) மாலை கணவன்-மனைவி இருவரும் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. வீட்டினுள் அறைக்குச் செல்வதும் வருவதுமாக இருந்த குழந்தை விளையாட்டாக அறைக்குள் சென்றபோது கதவு சாத்திக் கொண்டது.
அப்போது குழந்தை கதவு தாழ்ப்பாளை போட்டுள்ளது. அதை திறக்கத் தெரியவில்லை. இதனையடுத்து குழந்தை அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கதவை திறக்க முயன்றபோதுதான் உள்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறக்க முயன்றும் முடியாததால் வேறு வழியின்றி தீயணைப்பு நிலையத்துக்கு பெற்றோர் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணிநேரம் போராடி கதவின் தாழ்ப்பாளை திறந்து குழந்தையை மீட்டனர். அதன் பிறகே பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.