தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கிய நிலையில், அன்றைய தினம் நிதி அமைச்சர் மரிய வில்சன் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து, ஆக. 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். ஆகஸ்ட் 7ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. அதில், எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே காரசார விவாதமும், பல சுவாரஸ்ய நிகழ்வுகளும் நடைபெற்றது. இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று(10-08-2026) தொடங்கியது. இந்தநிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் வகையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

Comments are closed.