சென்னை, வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி மையத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா இன்று (07-10-2026) நடைபெற்றது. அதாவது நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 14வது பேட்ச்சை சேர்ந்த 11 பெண் டி.எஸ்.பிக்கள், 14 ஆண் டி.எஸ்.பிக்கள் என மொத்தம் 25 டி.எஸ்.பிக்களின் பயிற்சி நிறைவு பெற்றதை அடுத்து அவர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது டி.எஸ்.பிக்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பயிற்சி முடித்த அதிகாரிகளான டி.எஸ்.பிக்களுக்கு பதக்கங்களையும், கோப்பைகளையும் முதல்வர் விஜய் வழங்கினார். இந்த நிகழ்வில், தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Comments are closed.