Rock Fort Times
Online News

தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் டாப்- 10 கோவில்கள்… 4-வது இடத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில்!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 முன்னணி கோவில்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ரூ.233.50 கோடி வருவாயுடன் முதலிடத்தில் உள்ளது. 10 கோவில்களின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானம் 942 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் 10 கோவில்கள் விவரம்:

1. தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் (பழனி) வருமானம்: ரூ. 233.50 கோடி

2. அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் (திருவண்ணாமலை) வருமானம்: ரூ. 139.06 கோடி

3. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வருமானம்: ரூ.131.38 கோடி

4. சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் (திருச்சி) வருமானம்: ரூ. 111.09 கோடி

5. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் (திருத்தணி) வருமானம்: ரூ. 74.98 கோடி

6. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (மதுரை) வருமானம்: ரூ. 73.72

7. ராமநாதசுவாமி திருக்கோயில் (ராமேசுவரம்) வருமானம்: ரூ. 64.33 கோடி

8. அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் ( ஸ்ரீரங்கம்) வருமானம்: ரூ. 50.57 கோடி

9. சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் (அழகர்கோவில்) வருமானம்: ரூ.34.20 கோடி

10. பண்ணாரி அம்மன் திருக்கோவில் (சத்தியமங்கலம்) வருமானம்: ரூ.29.16 கோடி
இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த வருவாயானது உண்டியல் காணிக்கை, கட்டணத் தரிசனம், பிரசாத விற்பனை மற்றும் வாடகை மூலம் கிடைக்கிறது. இத்தொகையானது பழங்காலக் கோயில்களைப் புனரமைத்தல், திருப்பணிகள் செய்தல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, தினமும் வந்து செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்தப்படும்.அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடுகள், அன்னதான திட்டங்கள் மற்றும் தூய்மைப் பணிகள் போன்றவற்றுக்கு, இந்த வருவாய் முழுமையாக பயன்படுத்தப்படும்’ என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்