Rock Fort Times
Online News

விசாலா ஏஜென்ஸீஸின் புதிய லைட்டிங் மற்றும் ஹோம் டெக்கர் ஷோரூம் திருச்சி தில்லைநகரில் கோலாகல உதயம்… * சௌடாம்பிகா கல்விக்குழுமத் தலைவர் எஸ்.ராமமூர்த்தி திறந்து வைத்தார்! 

திருச்சியில் இயங்கிவரும் முன்னணி டைல்ஸ் மற்றும் சானிட்டரி விற்பனை நிறுவனமான விசாலா ஏஜென்ஸீஸ், புதிதாக இன்டீரியர், ஹோம் டெக்கர் அண்ட் லைட்டிங் ஷோரூமை திருச்சி தில்லைநகர், கண்ணப்பா ஹோட்டல் அருகே பிரம்மாண்டமாக ஆரம்பித்துள்ளது. இப்புதிய ஷோரூமை சௌடாம்பிகா கல்விக்குழுமத் தலைவர் டாக்டர் எஸ்.ராமமூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஆர்க்கிடெக்ட் எஸ்.சுப்பிரமணியன், ஜி.ஆர்.சிட்ஸ் நிர்வாக இயக்குனர் சி.ராமசாமி, விக்னேஷ் கல்விக் குழுமங்களின் தலைவர் வி.கோபிநாதன், சௌடாம்பிகா கல்விக்குழும செயலாளர் ஆர்.செந்தூர் செல்வன், சாமி புரோமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.இளமுருகன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜூலு, திருச்சி மண்டலத்தலைவர் எம்.தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் வி.ஸ்ரீதர், திருச்சி மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், அங்காளம்மன் சிட்ஸ் தீபக் ராஜா, அப்துல் ஹக்கீம், விசாலா ஏஜென்சீஸ் டி.பழனியப்பன் – பி.விசாலாட்சி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை விசாலா ஏஜென்ஸீஸ் நிர்வாக இயக்குனர் பி.எல்.ஆனந்த் வரவேற்றார். இப்புதிய ஷோரூமில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான அலங்கார விளக்குகள், போட்டோ ஃப்ரேம்கள்,

அலங்காரத் தாவரங்கள், கைவினைப் பொருட்கள், எல்.இ.டி விளக்குகள் போன்றவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விசாலா ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் பி.எல்.ஆனந்த் கூறும்போது.,”தற்போதைய நவீன காலத்தில் வீடுகள் கட்டப்படும்போதே பல்வேறு வகையான புதிய இன்டீரியர் மற்றும் ஹோம் டெக்கர் வசதிகளையும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே வீடுகள் மற்றும் வணிக அலுவலகங்களின் உட்புறத்தை அழகுப்படுத்த தேவையான லைட்டிங் விளக்குகள், எல்.இ.டி விளக்குகள், பல்வேறு வகையான போட்டோ ப்ரேம்கள், கார்டன் அண்ட் அவுட்டோர் பர்னிச்சர்ஸ் போன்றவற்றை டிஸ்ப்ளே செய்துள்ளோம். இது வெறும் லைட்டிங் மற்றும் ஹோம் டெக்கர் ஷோரூமாக மட்டுமில்லாமல் மொத்தம் மூன்று தளங்களில் 15 ஆயிரம் சதுரடி பரப்பளவில் லைவ் எக்ஸ்பீரியன்ஸ் சென்டராகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகவே ஷோரூமிற்கு வருகைதரும்  வாடிக்கையாளர்கள் புதுவிதமான உணர்வை புரிந்துகொள்ள முடியும் என்றார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விசாலா ஏஜென்சீஸ் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்