திருச்சி, காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை ரோடு வெங்காய மண்டி அருகே காந்தி மார்க்கெட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் 2 கிலோ 450 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதனை கடத்தியதாக வரகனேரி பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பிரபு (வயது43) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து புகையிலை பொருட்கள், ரூ. 5,640 மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Comments are closed.