திருச்சி பெரியகடை வீதி ராணி தெருவைச் சேர்ந்த சீனிவாசன், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ஆர். ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வராஜ், பாண்டி, ஸ்டாலின், அன்புச்செல்வன், பொன்ராஜ், இப்ராகிம், மகாதேவன் அடங்கிய குழுவினர் நேற்று ( 31.05.2023 ) இரவு அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது 56 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், அவற்றை விநியோகம் செய்ய பயன்படுத்திய 9 செல்போன்கள், ரூ.6.57 லட்சம் ரொக்கம், கடைகாரர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 227 கிராம் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதாலட்சுமி, கோட்டை இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், புகையிலை மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.