Rock Fort Times
Online News

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த திருச்சி, வயலூர் சாலை 60 அடி சாலையாக மாறப்போகுது… முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில்..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று(31-08-2026) முன்னாள் அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.என்.நேரு பேசுகையில்,” திருச்சியில் சண்முகா நகர் தொடங்கி, வயலூர் முருகன் கோவில் செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக இருக்கிறது. சுமார் 30,000 வீடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் பள்ளி, கல்லூரிகளும் அதிகமாக உள்ளன. அதனால் அந்தப் பகுதியில் கடந்த ஆட்சியில் 138 கோடி ரூபாய் செலவில் 60 அடி சாலையை அமைக்க திட்டம் கொண்டு வரப்பட்டது.
அந்தத் திட்டம் தற்போது நிலுவையில் இருக்கிறது. தற்போது அங்கு போக்குவரத்து நெரிசல் இருப்பதால் இந்த சாலையை அமைத்தால் சிறப்பாக இருக்கும். அதற்கு முன்னுரிமை தந்து செய்து தர வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளிக்கையில், மாநில கோரிக்கையில் சில அறிவிப்புகளை தான் வெளியிட முடியும். அண்ணன் சொன்ன சாலை தொடர்பாக டிபிஆர் வேலைகள் முடிவடைந்து விட்டது. வேலை திட்ட பட்டியலில் அந்த திட்டமும் இருக்கிறது .கூடிய சீக்கிரம் இது தொடர்பான நல்ல அறிவிப்பு வரும்” என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்