Rock Fort Times
Online News

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ‘ஹேப்பி நியூஸ்’: சம்பள உயர்வு, பண்டிகை முன்பணம் ரூ.20 ஆயிரம்… அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு..!

சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 31) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், இத்துறையில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் தடுக்கவும், பணியாளர்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டும் அவர்களது சம்பளம் உயர்த்தி வழங்கப்படுகிறது. அந்தவகையில், மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 33,023 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ரூபாயும், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏற்படும் செலவு ரூ.486.90 கோடி ஆகும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக
ரூ.20,000 வழங்கப்படும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று சீருடைகள் மற்றும் துணி மற்றும் தையல் செலவுகளுக்காக ரூ.6000 வழங்கப்படும். டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் தூய்மைப் பணி மற்றும் வசதிகளை உறுதி செய்ய, மாதந்தோறும் மாநகரக் கடைகளுக்கு ₹5,000, நகராட்சி, பேரூராட்சி கடைகளுக்கு ரூ.4,000, கிராமப்புறக் கடைகளுக்கு ரூ. 3,000 சில்லறை செலவினங்களை மேற்கொள்ள வழங்கப்படும். டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேரப் பணி ஒதுக்கீடு, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதத்திற்கு இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு ஆகியவை வழங்கப்படும். டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களில் தகுதியுடைய 250 பணியாளர்களைச் சிறப்புத் தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்