திருச்சி 55-வது வார்டில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சனை:* மாநகராட்சி அலுவலகத்திற்கு காலிக் குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்களால் பரபரப்பு..!
திருச்சி மாநகராட்சி 55-வது வார்டில் நிலவும் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் கவுன்சிலர் ராமதாஸ் மற்றும் கோட்டத் தலைவர் மகாலட்சுமி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து மாநகராட்சி வாசலில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மாநகராட்சி துணை ஆணையர் அஜிதா பர்வினை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில்,,55வது வார்டில் நிலவும் குடிநீர் பிரச்சனை மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டனர். திடீரென காலி குடங்களுடன் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.